நடிகை ஸ்ருதிஹாசன் திரைத்துறைக்கு வருவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது இவர் பிரபாசுக்கு ஜோடியாக பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தின் பெயர் சலார் ஆகும். இந்நிலையில் சாந்தனு என்பவருடன் காதலில் ஈடுபட்டுள்ள நடிகை சுருதிஹாசன் அவ்வப்போது தனது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நடிகை சுருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். தற்போது நடிகை ஸ்ருதிஹாசன் திரைத்துறைக்கு வருவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.