நடிகர் சந்தானத்தின் மகன் நிபுன் ,நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா நடிப்பில் உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக கலக்கி வந்த சந்தானம் ஹீரோவாக அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் தயாராகியுள்ள நிலையில் கார்த்திக் இயக்கத்தில் ‘டிக்கிலோனா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்தின் மகன் நடித்திருப்பதாக தகவல் பரவி பின்னர் மறுக்கப்பட்டது .
இந்நிலையில் நடிகர் சந்தானத்தின் மகன் நிபுன் ஒரு பிரபல நடிகரின் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இவர் நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா நடிப்பில் தயாராக உள்ள ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.