தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. இவர் திரைத்துறை அதிகம் ஆணாதிக்கம் நிறைந்துள்ள துறையாகவே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் பெண்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி நல்ல நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் அனுஷ்கா மற்றும் சமந்தா மாதிரியான திறமையான நடிகையாக இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும் என்றும், அவர்கள் இருவருமே தென்னிந்திய நடிகர்கள் மீதான பார்வையை மாற்றியிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.