Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் எப்பொழுதும் போராட்டம் தான் – வேதனையை பகிர்ந்த வேதிகா ..!!

பல்வேறு போராட்டங்களில் தான் நாங்களும் வாழ்க்கையை கொண்டு போகிறோம் என்று வேதனையுடன் கூறியுள்ளார் நடிகை வேதிகா.

மதராஸி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, முனி, காளை, பரதேசி, காவியத்தலைவன் உட்பட பல படங்களில் நடித்துள்ள நடிகை வேதிகா. கொரோனா ஊரடங்கில் அவர் கொடுத்துள்ள பேட்டியில் கூறியது:- “ஹிந்தி நடிகர் சுஷாந் சிங்குக்கு நல்ல ஒரு எதிர்காலம் சினிமாவில் இருந்தது. ஆனால் அவரது  மரணம் எனக்கு மிகவும் அதிர்ச்சியை தந்தந்து. திறமையான நடிகருக்கு ஏன் இந்த நிலைமை என்று வேதனைப்பட்டேன். அவருக்கு என்ன நடந்திருக்கும்? ஏன் அவர் தற்கொலைக்கு துணிந்தார்? என்பது இப்பொழுது வரை தெரியவில்லை.

ஆனால் எங்களையும் அவரின் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்க்க முடிந்தது. ஏனென்றால் நாங்களும் பல போராட்டங்களுடன்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அவருக்கு இருந்த அதே மாதிரியான சிந்தனைகள் எங்களுக்கும் வந்து இருக்கும். ஆனால் நாங்கள் அந்த உணர்வை கடக்க பழகி இருப்போம். ஏனெனில்  போராட்டமும் மன அழுத்தமும் என்றும் வாழ்வில் நிரந்தரம் இல்லை. அதற்காக உயிரை விடுவது என்பது நல்லது அல்ல. மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர வழி செய்ய வேண்டும்”, என கூறியுள்ளார்.

 

 

 

Categories

Tech |