எஸ்ஏசி தன் மகனான விஜய் பற்றி சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
விஜயின் அப்பாவும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சி. யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றார். அதில் யார் இந்த எஸ்ஏசி என்ற தலைப்பில் தான் கடந்து வந்த பாதையை கூறி வருகின்றார். தன்னுடைய பிடிவாதம் பற்றியும் கூறி வந்த எஸ்.ஏ.சி பிறகு தன்னுடைய மகனான விஜய்யின் பிடிவாதம் பற்றி சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, 1992-ஆம் வருடம் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என விஜய் அப்பாவிடம் கேட்டுள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்து நீ படித்து டாக்டராகு. நான் உனக்கு ஹாஸ்பிட்டல் கட்டித்தரேன் என கூறியுள்ளார்.
இதனால் எதுவும் பேசாமல் அமைதியாக சென்று விட்டார் விஜய். அதன் பிறகு ஒரு நாள் என்னை யாரும் தேடாதீர்கள் என கடிதம் ஒன்றை எழுதி விட்டு காணாமல் போய் விட்டார் விஜய். உடனே எஸ்.ஏ.சியும் அம்மா சோபாவும் பிள்ளையைக் காணோம் என பதறி போய் தேடிய பொழுது தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இருவரும் அங்கு சென்று விஜய்யை சமாதானப்படுத்தி அழைத்து வந்தார்கள். விஜய், சினிமாவில் நடித்து தீரவேண்டும் என்ற பிடிவாதத்துடன் இருந்தது தான் இப்படி ஒரு நடிகராக இருக்கிறார். விஜய் மிரட்டியோ பயமுறுத்தியோ தன்னை போலவே பிடிவாதமாக இருந்ததால் தான் நினைத்ததை சாதித்து விட்டதாக பெருமையாக கூறினார் எஸ்ஏசி.