நடிகர் யோகி பாபு தனது பழைய புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் வலிமை, பீஸ்ட், டாக்டர், அயலான் போன்ற படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதுதவிர இவர் ஒரு சில படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் கடந்த ஆண்டு யோகி பாபுவுக்கு மஞ்சு பார்கவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது . இதையடுத்து இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
— Yogi Babu (@iYogiBabu) September 26, 2021
இந்நிலையில் சினிமாவிற்கு நடிக்க வந்த காலகட்டத்தில் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை யோகி பாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘யோகி பாபுவா இது?’ என ஆச்சரியமடைந்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .