தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்து சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் ரஜினி அடுத்ததாக எந்த படத்தில் நடிப்பார் யாருடன் இணைவார் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இதனால் ரஜினியை தங்கள் படத்தில் நடிக்க வைப்பதற்கு பலரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ரஜினி இன்னும் 2 படங்கள் மட்டுமே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் தனது கடைசி படம் தனது இரண்டு மகள்கள் இணைந்து தயாரித்ததாக இருக்க வேண்டுமென்று ரஜினி முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.