Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமா “ஏழையா, பணக்காரனானு” பாக்காது… திரில்லர் கதை களத்தில் அஷ்டகர்மா…. சரவெடியாக பேசிய எஸ்.ஜே சூர்யா….!!

“அஷ்டகர்மா” படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் எஸ்.ஜே சூர்யா மாஸாக பேசியுள்ளார்.

விஜய் தமிழ் செல்வன் திரில்லர் படமான அஷ்டகர்மாவை இயக்கியுள்ளார். இதில் செல்வாக்கு மிகுந்த கிஷன், நந்தினி ராய், ஷ்ரதா உட்பட பலரும் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்று பேசிய எஸ்.ஜே சூர்யா சினிமா ஏழை பணக்காரன் என்று யாரையும் பார்க்காது என கூறியுள்ளார்.

மேலும் பஸ் கண்டக்டர் கூட சூப்பர்ஸ்டார் ஆகலாம் எனவும், பணக்காரர்கள் பெரிய நட்சத்திரமாகலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி விஜய் தமிழ் செல்வன் நல்ல கதையை உருவாக்கி அதனை அழகான படமாக எடுத்துள்ளார் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இந்த படம் குறித்து இயக்குனர் விஜய் தமிழ்செல்வன் கூறியதாவது, மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ்ஸுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், தான் அஷ்டகர்மா ஸ்கிரிப்டை எடுத்துக்கொண்டு அங்குமிங்கும் அலையவில்லை என்றும் அவர் பேசியுள்ளார்.

Categories

Tech |