நடிகை காஜல் அகர்வால் அவரது கணவருடன் இணைந்து புதிய தொழில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் . தற்போது இவர் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘ஆச்சார்யா’, தமிழில் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ மற்றும் ‘கோஸ்ட்டி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணமான பின்பும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நடிகை காஜல்அகர்வால் தன் கணவருடன் இணைந்து புதிய தொழில் தொடங்கியுள்ளார்.
இன்டீரியர் டெகரேட் பிசினஸ் மூலம் வீட்டை அலங்கரித்து தருவதுடன் வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்கிறார்கள். மேலும் இந்த நிறுவனத்தின் அறிமுக விளம்பர படத்தில் நடிகை காஜல் அவரது கணவருடன் இணைந்து நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பின் அசின், ஜெனிலியா போன்ற பல நடிகைகள் சினிமா துறையை விட்டு விலகியுள்ளனர் . தற்போது நடிகை காஜல் புது தொழில் தொடங்கி இருப்பதால் விரைவில் இவரும் சினிமா துறையை விட்டு விலகப் போகிறாரா ?என ரசிகர்கள் சந்தேகத்தில் உள்ளனர்.