ஜீப்பை திருடி சென்ற திருடனை காவல்துறையினர் வலைவீசை தேடி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் சவுந்தரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய அலுவலகத்திற்கு நேற்று மர்மநபர் ஒருவர் சென்று தான் முருகன் என்றும் வக்கீலாக வேலை பார்ப்பதாகவும் கூறியுள்ளார். இவர் தனக்கு ஒரு கார் வேண்டும் என்றும், அதை சிறிது தூரம் ஓட்டி பார்த்துவிட்டு வாங்கிக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த சௌந்தர பாண்டியன் தன்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு ஊழியரை முருகனுடன் அனுப்பி வைத்துள்ளார்.
இதனையடுத்து ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள ஜிப்பை முருகன் எடுத்துச் சென்றுள்ளார். இவர் செய்த தூரம் சென்றவுடன் ஊழியரை கீழே இறங்க சொல்லிவிட்டு அவரது கவனத்தை திசை திருப்பிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார். இது தொடர்பாக திருமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் நபரை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் வடிவேலு நடித்த ஜனனம் படத்தில் வரும் காட்சி போல் காட்சி போல் சினிமா பாணியில் திருட்டை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.