கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று நேரு மைதானம் அருகில் சில திருடர்கள் ஒரு நபரின் செல்போனை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதனை அறிந்த உதவி எஸ்.ஐ. வருண் காரில் இருந்து இறங்கி சினிமா பாணியில் திருடர்களை துரத்த தொடங்கினார். அதன் பிறகு நீண்ட தூரம் துரத்தி அந்த திருடனை பிடித்துள்ளார். இதையடுத்து தரையில் கிடத்தி அந்த திருடன் மேல் உட்கார்ந்து தப்பிச் செல்லாமல் பிடித்தார். சிறிது நேரம் கழித்து மற்ற போலீசார் அங்கு வந்த திருடனை அழைத்துச்சென்றனர்.
அதனைத் தொடர்ந்து குற்றவாளியிடம் இருந்து திருடப்பட்ட செல்போன் மீட்கப்பட்டது. மேலும் அவரது கூட்டாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து பாண்டேஷ்வர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எஸ்.ஐ. வருண் திருடனை துரத்தி செல்லும் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவரைப் பாராட்டிய மாநகர ஆணையர் சசிகுமார் காவல்துறை சார்பில் எஸ்.ஐ. வருனுக்கு வெகுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.