Categories
தேசிய செய்திகள்

சினிமா பாணியில் திருட்டையும் குலத் தொழிலாக கொண்டுள்ள கிராமம்….!! சிக்கியது எப்படி….??

பீகார் மாநிலம் கதிகார் மாவட்டம் கோர்ஹா பகுதியில் ஜீராப்கஞ்ச் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் திருட்டை தங்களது குல தொழிலாக செய்து வருகிறார்கள்.பல வருடங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்து இங்கு குடியேறிய ‘கிச்சட்’ பழங்குடியினர், திருட்டை தங்கள் வாழ்வாதாரமாக செய்து வருகின்றனர் .கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள், சிறுவர்களை பள்ளிக்கு அனுப்பவது இல்லை. அதற்கு மாறாக திருட்டு தொழிலை கற்பிக்கிறார்கள். அவர்களுக்கு திருடுவது எப்படி என்பது குறித்து பாடம் சொல்லிக்கொடுக்கிறார்கள்.
திருட்டில் ஈடுபடுவது எப்படி? அதில் மாட்டிக்கொண்டால் தப்பிப்பது எப்படி? அப்படியே மாட்டிக்கொண்டால் போலீசாரிடம் உண்மையை கூறாமல் சமாளிப்பது எப்படி? என்பது குறித்து சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பெரியவர்கள் கொடுக்கும் வழிமுறைகளை பின்பற்றி சிறுவர்கள் முதலில் சின்ன சின்ன திருட்டில் ஈடுபடுவார்கள். பிக்பாக்கெட். கடைகள் மற்றும் வீடுகளில் புகுந்து திருடுவது என முதலில் அவர்கள் தனது தொழிலை தொடங்குவார்கள்.
பின்னர் அதில் கை தேர்ந்ததும் வங்கிகள், பெரிய நிறுவனங்கள், நகை கடைகளில் புகுந்து பெரிய அளவிலான கொள்ளையில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு பெரிய அளவில் பணம், நகைகள் கிடைக்கும். அதன் மூலம் அந்த கிராமமே ஜாலியாக வாழ்க்கையை கழித்து வந்துள்ளனர்.

இந்த திருட்டு தொழிலை வழிநடத்த ஒரு தலைவரும் இருந்து வருகிறார்.கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் கிராமத்தினர் தங்கள் தொழிலில் கிடைக்கும் லாபத்தில் அந்த தலைவருக்கும் ஒரு பங்கினை கொடுக்க வேண்டுமாம். இந்த திருட்டு தொழிலால் மிகவும் ஜாலியாக இருப்பவர்கள் அந்த வீடுகளில் உள்ள பெண்கள் தான். கழுத்து நிறைய நகைகள் கை நிறைய பணம் என்று ஜாலியாக சுற்றி திரிந்த அந்த பெண்களை கண்டு போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர்களை பின் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இந்த திருட்டு கிராமம் பற்றிய உண்மை வெளிவந்துள்ளது.
போலீசார் குற்றப் புலனாய்வுத் துறை விரிவான விசாரணை நடத்தி, தற்போது திருட்டில் ஈடுபடுபவர்களின் பட்டியலைத் தயாரித்துள்ளது. இந்த திருட்டு கும்பலுக்கு ராகேஷ் குவாலா என்பவர் தலைமை தாங்குகிறார்.

Categories

Tech |