Categories
மாநில செய்திகள்

சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பிய பெண் பாலியல் வன்கொடுமை…. காவலர் கைது….!!!

மதுரையில் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் காவலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பள்ளி கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு ஆசிரியர்கள் மூலம் பாலியல் வன்கொடுமை, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணியாற்றும் நபர்கள் மூலம் பாலியல் வன்கொடுமை, ரோட்டில் செல்லும் பெண்களைக் கூட விட்டுவைப்பதில்லை. ஒரு பெண் தனியாக சென்றுவிட்டு வீடு திரும்புவது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அதிலும் பெண்களுக்கு பாதுகாப்பாக செயல்பட வேண்டிய காவலர்களே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அப்படி மதுரையில் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பிய பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் திலகர் திடல் குற்றப்பிரிவு முதல்நிலைக் காவலர் முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |