தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் கோவிந்தராஜ் (82). இவர் சுமார் 65 படங்களுக்கு மேலாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோவிந்தராஜ்வயது முதிர்வு காரணமாக சென்னையில் இன்று (மார்ச் 24) காலமானார். இவர் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக, அஜித் மற்றும் பார்த்திபன் இணைந்து நடித்த நீ வருவாய் என, சூர்ய வம்சம் ஆகிய படங்களுக்கு பணியாற்றியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ராமராஜன், கனகா, சங்கீதா ஆகியவர்களுக்கு தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும் சூப்பர் குட் பிலிம்ஸ், கே.எஸ். ரவிக்குமார், விக்ரமன் போன்றோரது படங்களுக்கு ஆஸ்தான ஆடை வடிவமைப்பாளர் இவரே ஆகும். இவரது உடல் சென்னை போரூரிலுள்ள இவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. தற்போது இவரின் மறைவுக்கு திரையுலகினர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.