எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதிமுக கட்சியில் இடைக்கால பொதுச் செயலாளராக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. நான் திரைப்படம் பார்த்தே 25 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை திரைத்துறையும் அரசியலும் ஒன்றாக கலந்துள்ளது. அதிலும் திரைத்துறைக்கும் அதிமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.ஏனென்றால் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் அரசியலிலும் சாதித்தார்கள்.
இல்லையில் திரைத்துறையில் சாமானியர்கள் வெற்றி பெறலாம். இயக்குனர்களின் உதவியால் நடிகர்கள் வெற்றி பெறலாம். ஆனால் அரசியலில் அது முடியாது. ஒவ்வொரு படியாக ஏறித்தான் வர முடியும். இந்நிலையில் தனி மனிதனாக எதை வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால் அதை செயல்படுத்துவது அனைத்தும் சட்ட விதிகளுக்குள்பட்டே இருக்க முடியும். மேலும் அரசியல் பயணம் என்பது பள்ளமும், முள்ளும் நிறைந்த பாதை. இந்நிலையில் அதிமுக ஆட்சியில் திரைத்துறைக்காக எண்ணற்ற திட்டங்களை நாங்கள் செய்துள்ளோம் என கூறியுள்ளார்.