பிரபல நடிகை தனக்கு விருப்பம் இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிகை சாய் பல்லவி முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவரை தெலுங்கில் லேடி பவர் ஸ்டார் என்று அழைக்கின்றனர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்கி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீப காலமாகவே நடிகை சாய் பல்லவியின் படங்கள் தோல்வி அடைவதால் அவரிடம் சிலர் படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்குமாறு வற்புறுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் நடிகை சாய் பல்லவி தனக்கு பிடிக்காத கதாபாத்திரங்களில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் எனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் போனாலும் நான் டாக்டர் வேலைக்கு செல்வேன். இல்லையெனில் ஷாப் வைத்தாவது, வேலைக்கு சென்றாவது பிழைத்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.