Categories
மதுரை மாவட்ட செய்திகள்

” சினிமா ஸ்டைலில் பெண்களிடம் வழிப்பறி”45 சவரன் நகை பறிமுதல்..6 பேர் கொண்ட கும்பல் கைது!!..

மதுரையில்  பெண்களையே  குறிவைத்து  வழிப்பறி  செய்த  6 பேர்  கொண்ட  கும்பலை  காவல்  துறையினர்   கைது  செய்துள்ளனர் .

மதுரை  மாவட்டம்  திருமங்கலத்தை  அடுத்த அழகுசிறை  கிராமத்தில்  வசித்து வரும்  சிந்துஜா  உடலில்  ரத்தம்  சொட்டும்  சிராய்ப்பு காயங்களுடன்  சிகிக்சை  பெற்று  வருகிறார் . வழிப்பறியர்கள்  கோரை  பிடியால்  ஏற்பட்ட கொடூரம் தான் இந்த  இரத்தக்காயங்கள் . கடந்த மாதம் 30 ஆம்  தேதி  கருமாத்தூர்  சாலையில்  இருசக்கர  வாகனத்தில்  கணவர்  சுந்தரபாண்டியனுடன் சென்று கொண்டிருந்தார் .அப்போது  தன்னை  ஆபத்து  பின்  தொடர்வதை  அவர்  கவனிக்கவில்லை .

தீடிரென்று பின்னால்  வந்த  இருவர்  சிந்துஜாவின்   கழுத்தில்  இருந்த  5 சவரன் தங்க சங்கிலியை  பறிக்க  முயன்றனர் .நிலைத்தடுமாறி  கீழேவிழுந்த  பின்னும் சிந்துஜா தங்க சங்கலியை  இருக்க பிடித்துக்கொண்டு  போராடினார்  .கொஞ்சமும்  இரக்கம்  இல்லாத  வழிப்பறி கொள்ளையர்கள்  சிந்துஜாவின்  தங்க  சங்கலியை  விடாமல் சாலையில்  சிறிது  தூரம்  இழுத்து  சென்றனர் .  இந்நிலையில்    சிந்துஜா  தங்கச்சங்கிலியும்  பறிபோனதோடு பலத்தகாயம் அடைந்தார் . பெரும் பரபரப்பை  ஏற்படுத்திய இச்சம்பவம்  தொடர்பாக   3  தனிப்படை  அமைக்கப்பட்டது .  சிசிடிவி காட்சிகள் முலம் விசாரணை நடத்தப்பட்ட போது வழிப்பறியில் ஈடுபட்டது உசுலம்பட்டியை  சேர்ந்த கார்த்திக் மற்றும் அருண் என்பது தெரியவந்தது. இவர்களிடம்  நடத்தப்பட்ட விசாரனையில் ஒரு  கும்பலே திட்டமிட்டு சினிமா ஸ்டைலில்  வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஆட்டுக்கறி கடை நடத்தி வந்த இருவரும் விரைவில் பணக்காரர்கள்  ஆக வேண்டும் என்று     ஆசை பட்டிருக்கிறார்கள். ஆசை பட்டதெல்லாம் சரிதான் அதற்க்கு தேர்வு செய்த முறைதான் தவறு தனியாக செல்லும் பெண்களிடம்  வழிப்பறி செய்ய முடிவு செய்கின்றனர். அதற்க்கு  உதவியாக சுரேந்திரன் , செல்லபாண்டியன், நவீன் மற்றும் பிரித்தி  விமல் ஆகியோர் உடன்   சேர்ந்து கொள்கின்றனர்.  இவர்கள் இரண்டு பேர் கொண்ட குழுவாக பிரிந்து ஒரு பெண்ணை       பின்  தொடர்ந்து பக்காவாக வழிப்பறி செய்து  வந்ததாக காவல் துறை கூறுகிறது. வழிப்பறியில்   ஈடுபட்ட 6 பேர் கொண்ட குழுவை கைது செய்து அவர்களிடம் இருந்து  45 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை உரியவர்களிடம்  ஒப்படைக்க  தனிப்படை கொண்ட குழு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

Categories

Tech |