தமிழ் சினிமா திரையுலகில் புன்னகை அரசி என பெயர் வாங்கியவர் சினேகா. இவருக்கு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்த போது பிரசன்னா மீது காதல் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 வருடங்களாக ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி அதன்பின் கல்யாணம் செய்து கொண்டனர். கோலிவுட்டின் அழகான நட்சத்திர காதல் தம்பதிகளில் இவர்களும் ஒருவராக 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணத்திற்கு பின் நடிப்பை தொடர்ந்துள்ளார் சினேகா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்திருக்கிறார். பிரசன்னா துப்பறிவாளன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சினேகாவும் டைரக்டர் அருண் வைத்தியநாதன் இயக்கும் ஷாட் பூட் 3 படத்தில் வெங்கட் பிரபுவிற்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் விஹான் என்ற மகனும், ஆதித்யா என்ற மகளும் இருக்கின்றனர். வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான தம்பதியாக இருக்கும் இவர்கள் தங்களது பத்தாவது வருட திருமண நாளை இன்று கொண்டாடி வருகின்றனர்.
இதனையொட்டி தனது மனைவி சினேகாவுக்கு உருகி உருகி பதிவு ஒன்றை நடிகர் பிரசன்னா வெளியிட்டிருக்கிறார். அதில் இது எங்களின் பத்தாவது ஆண்டு திருமண நாள். இந்த பத்து வருடங்களை அவ்வளவு எளிதாக கடந்து விடவில்லை. நாங்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றோம். மேலும் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வந்திருக்கின்றன. உங்களுக்கு கொடுத்த சில வாக்குறுதிகளை மீறி இருக்கின்றேன். அதனால் உங்கள் இதயம் உடைந்து இருக்கிறது என எனக்கு தெரியும்.
ஆனால் எந்த சூழ்நிலையிலும் உங்கள் அன்பு என்னிடம் குறைந்தது இல்லை. உங்கள் அன்பால் எப்போதும் என்னை வென்று வருகின்றீர்கள். அதனால் உங்களது அன்பை விட தூய்மையானது எதுவுமில்லை. மேலும் என் இதயத்தில் நீங்கள் நிரந்தரமாக இடம் பெற்றிருக்கின்றார்கள்.லவ் யூ கண்ணம்மா என குறிப்பிட்டிருக்கின்றார். இந்த பதிவு ரசிகர்களை மகிழ்ச்சி உள்ளாகியிருக்கிறது.