Categories
மாநில செய்திகள்

“சின்னக் கலைவாணர்” குணமடைந்து மீண்டு வர வேண்டும் – மு.க ஸ்டாலின்…!!!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வேகம் எடுத்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் இரவு ஊரடங்கு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு 8000 நெருங்கியுள்ளதால் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் ஒரு சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விவேக் கொரோனா தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டார்.

மேலும் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாறும் வலியுறுத்தினார். இந்நிலையில் இன்று நடிகர் விவேக் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நடிகர் விவேக் மீண்டும் குணமடைந்து வரவேண்டும் என்று பலரும் பிரார்த்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டாலின், “சமூக சீர்திருத்தக் கருத்துகளுடன் நகைச்சுவையால் மக்களை மகிழ்விக்கும் சின்ன கலைவாணர் விவேக் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து நான் வருத்தமுற்றேன். அவர் விரைவில் முழுமையான நலம் பெற்று தனது கலை சேவைகளையும், சூழியல் பணிகளையும் தொடர வேண்டும் என்றுதெரிவித்துள்ளார் .

Categories

Tech |