மிகவும் பிரபல சின்னத்திரை நடிகையான திவ்யா பட்னாகர் கொரோனா பாதிப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தாலும் கொரோனாவிற்கு பல்வேறு பிரபலங்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் பலியாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிரபல சின்னத்திரை நடிகையான திவ்யா பட்னாகர்(34) கொரோனா பாதிப்பால் திடீரென உயிரிழந்தார்.
இவர் ஏற்கனவே ரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். நகைச்சுவை நிகழ்ச்சியில் படப்பிடிப்பில் பங்கேற்ற போது இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் யே ரிஷ்தா க்யா, கேளதா ஷாய், ஸன்ஸ்கார், உதான் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமானவர். இவரின் மறைவுக்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.