சின்னத்திரை நடிகை சித்ரா திருமணம் செய்துகொண்ட நபர் நல்லவர் கிடையாது என்பதால் தனக்கு சந்தேகம் இருப்பதாக சித்ராவின் தோழி தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் திருமணம் நிச்சயக்கப்பட்ட ஹோம்நாத்துடன் அறையில் தங்கியிருந்த போது அவர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் சித்ராவின் கடைசி நிமிடங்கள் குறித்து அவரது தோழி சரண்யா கூறுகையில், “சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக தெரியவில்லை. அவர் தற்கொலை செய்வதற்கு முன்னதாக எங்களுடன் இயல்பாக இல்லை. மிகவும் டென்ஷனாக இருந்தார்.
அதுமட்டுமின்று முக்கிய ஆவணங்களைக் கொண்டு வருமாறு அவரது உதவியாளரிடம் கூறினார். எனக்குத் தெரிந்து அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. இது தற்கொலை இல்லை என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். இதனையடுத்து சித்ராவின் தோழியான ரேகா நாயர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதில், சித்ரா திருமணம் செய்துகொண்ட ஹேம்நாத் நல்ல பையன் கிடையாது. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்திருக்கிறது. சென்னையில் அவரை தெரியாத பெண்களே கிடையாது. அவர் பெண்கள் விஷயத்தில் சரியானவர் இல்லை” என்ற வலைதளத்தை பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.