தமிழில் டார்லிங் திரைப்படம் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கிகல்ராணி. இதையடுத்து இவர் யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இதில் நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக கூறிவந்த சூழ்நிலையில், அண்மையில் இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது.
அதன்பின் நிக்கி கல்ராணி சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியாகும் “வெல்லும் திறமை” என்ற நிகழ்ச்சியில் நடிகை நிக்கிகல்ராணி, பிரபல நடிகரும் கராத்தே நிபுணருமான ஷிஹான்ஹுசைனி மற்றும் நடன இயக்குனர் ஸ்ரீதர் போன்றோர் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.