Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்னம்மாவின் ஆதரவு எங்களுக்கு இருக்கும் – டிடிவி தினகரன்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இதையடுத்து வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அதிமுகவுடன் ஏற்பட்ட அதிருப்தியில் காரணமாக தேமுதிக அமமுகவுடன் கூட்டணி சேர்ந்தது. இந்நிலையில் கூட்டணி அமைத்து முதன்முறையாக டிடிவி இன்று விஜயகாந்தை சந்தித்தார். பின்னர் பேசிய அவர், ” திமுக, அதிமுக வீழ்த்தவே அமமுக-தேமுதிக கூட்டணி அமைத்துள்ளதாகவும், சின்னம்மாவின் ஆதரவு எங்களுக்கு எப்போதும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |