திரைப்பட நடிகர் விவேக் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று காலை 10.30மணி அளவில் சூளை,வசந்தி தியேட்டர் பின்புறம், ரங்கையைச் செட்டி தெருவில் அமைந்துள்ள டாக்டர். அப்துல் கலாம் சிலை அருகில் மறைந்த சின்ன கலைவாணர் நடிகர் விவேக் திருவுருவ படம் வைக்கப்பட்டது. இந்தப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, இலவச மரக்கன்று வழங்கும் விழா சூளை பொது நல மன்ற சார்பாக நடைபெற்றது. கடந்த ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் இன்று முதலாமாண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்படுகிறது.
Categories