Categories
சினிமா தமிழ் சினிமா

சின்ன கலைவாணர் நடிகர் விவேக் பெயரில் தெரு…. கௌரவம் கொடுங்கும் தமிழக அரசு…..!!!

திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திரையுலகில் தனது முற்போக்குச் சிந்தனையால் சமூக சீர்திருத்த கருத்துகளை நகைச்சுவை மூலமாக மக்களுக்கு நடித்துக் காட்டியவர். அதனால் அன்பாக சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டார்.

அவர் இறந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து நினைவஞ்சலிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை விவேக்கிடம் மேலாளராக பணியாற்றிய செல் முருகன் மற்றும் விவேக் பசுமை கலாம் அமைப்பை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்தனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுகவின் முக்கிய நிர்வாகி பூச்சி முருகன், நடிகர் விவேக் இல்லை என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை விதைத்தவர். தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதன் மூலமாக அவர் எப்போதும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார். முதலமைச்சரிடம் சென்னையில் ஒரு தெருவுக்கு விவேக் பெயரை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். உரிய முறையில் கடிதம் கொடுத்தால் நிச்சயமாக செய்யலாம் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார். அதற்கான கடிதத்தை தயார் செய்யுங்கள் என்று அவர் பேசியுள்ளார்.

Categories

Tech |