Categories
தேசிய செய்திகள்

சின்ன சேமிப்பு அதிக லாபம்… அசத்தலான சேமிப்புத் திட்டம்… ஜாயின் பண்ணி பாருங்க…!!!

அஞ்சல் அலுவலக சேமிப்பு என்பது மிகவும் நம்பிக்கைக்குரிதாக கருதப்படுகிறது. வங்கிகளை காட்டிலும் தபால் அலுவலக சேமிப்புகள் அதிக வட்டி விகிதங்களை வழங்கி நம் லாபத்தையும் அதிகரிக்கிறது. அந்தவகையில் இந்திய தபால் துறை மக்களுக்கு தொடர்ந்து அருமையான திட்டங்களை வழங்கிவருகிறது. அதன்படி தபால் துறை வழங்கும் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தினைப் பற்றி இங்கு பார்ப்போம்.

தேசிய சேமிப்பு பத்திர திட்டம்:

அஞ்சல் துறையில் உள்ள பல சேமிப்புத் திட்டங்களைப் போன்று தேசிய சேமிப்பு பத்திர திட்டமும் ஒன்று. இந்தத் திட்டத்தில் வங்கிகளை விட அதிகமான வட்டியைப் பெறலாம். சில பொதுத் துறை வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை விட குறைந்தது 0.5 சதவீதம் அதிக வட்டியை இத்திட்டத்தில் பெறலாம்.இத்திட்டத்திலும் வருமான வரியில் இருந்து வரி விலக்கைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தின் கீழ் நாம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். நாம் சேமிக்கும் தொகைக்கு நிகராக பத்திரம் நமக்கு கொடுக்கப்படும். 5 ஆண்டுகளுக்குப் பின் நாம் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ற வட்டியுடன் நமக்கு தொகையும் கிடைக்கும். இந்த திட்டத்தில் நாம் கடனுதவியும் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் சேர 18 வயது பூர்த்தியாகியிருக்கவேண்டும். இதில் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதலீடு செய்யவேண்டும். அதிகபட்சம் அளவுகள் ஏதும் கிடையாது.

உதாரணமாக இதில் நீங்கள் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்யும் போது 5 ஆண்டுகளுக்குப் பின் உங்களுக்கு 6.8% வட்டி சேர்த்து உங்களுக்கு ரூ.2.8 லட்சம் வரைக் கிடைக்கும். அதேபோல் நீங்கள் முதலீடு செய்யும் தொகையில் 60% வரை கடனுதவியும் பெறலாம்.

இதுபோன்ற சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஆசையா? இதோ அதற்கான வாய்ப்பை ஜார் செயலி வழங்குகிறது. மேலும் நம் நாட்டில் முதல் முறையாக உண்டியல் சேமிப்பு திட்டத்தை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது. எனவே இந்த செயலியைப் பயன்படுத்தி தினசரி பணத்தை சேமிக்கும் பழக்கத்தைத் தொடங்குங்கள்.

கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்து இப்போதே செயலியைப் பதிவிறக்கவும்
https://getjar.app.link/y6jIpDQcTfb

Categories

Tech |