பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் -4 நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று ரேகா ,வேல்முருகன் ,சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ,சனம், ரமேஷ் ,நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர் . இந்நிலையில் வெளியேறிய ரேகா, வேல்முருகன், சம்யுக்தா, சுரேஷ் ஆகியோர் ஒரு சிறிய ரியூனியன் போட்டுள்ளனர் . அவர்கள் மீண்டும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர் .
அதில் சனம் மற்றும் சுசித்ரா கலந்து கொள்ளாததற்கு காரணத்தை ரேகா வீடியோவாக வெளியிட்டுள்ளார் . அந்த வீடியோவில் ‘எல்லோரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. சனம் மற்றும் சுசித்ரா இருவரும் பிஸியாக இருப்பதால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. ரமேஷ் மற்றும் நிஷா இருவரும் நேற்றுதான் வெளியேற்றப்பட்டார்கள் . பிக்பாஸ் வீட்டுக்குள் தான் கேம், வெளியே வந்தால் நாங்கள் அனைவரும் ஒன்றுதான்’ எனக் கூறியுள்ளார்.