தற்போது ஊரடங்கு காலம் என்பதால் மக்கள் பலரும் இணையதளத்திலேயே நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்த சமயத்தில் வேடிக்கையான சில விடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதை நெட்டிசன்கள் கண்டு ரசித்து வருகின்றனர். இதில் ஒரு சில வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக குட்டி யானைகள் விளையாடும் வீடியோக்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருக்கும்.
அந்த வகையில் தற்போது யானைகள் சேற்றில் புரண்டு விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் குழந்தைகளையும் மிஞ்சிவிடும் சேட்டை செய்யும் அந்த அழகு குட்டி யானைகளின் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இவ்வாறு சின்ன சின்ன விஷயங்களை கூட மகிழ்ச்சியாக மாற்றி வாழக்கையை அனுபவிக்கலாம் என்று ஒருசிலர் பதிவிட்டு வருகின்றனர்.
Happiness is enjoying these little things in life 💕 pic.twitter.com/LncnL2DPDq
— Susanta Nanda (@susantananda3) July 18, 2021