விஜய் மக்கள் இயக்க நிர்வாகி யாரும் தப்பு செய்தால் விஜய் நடவடிக்கை எடுப்பார் என உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்க பிரதிநிதிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்த விஜய் அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். மக்கள் உங்களை நம்பி ஓட்டு போட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒரு சின்ன விஷயம் சொன்னாலும் நீங்கள் அதை உடனடியாக செய்யவேண்டும் என்பதுதான் தளபதி விஜய்யின் உத்தரவு.
இதன்படி நாங்கள் எல்லாருமே மக்களுக்கு சேவை செய்து உங்களுடைய பெயரை கண்டிப்பாக காப்பாற்றுவோம் என்று விஜயிடம் சொன்னதாக மக்கள் இயக்க நிர்வாகி கூறினார்.செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் இயக்க நிர்வாகியிடம், விஜயின் எதிர்கால அரசியல் குறித்து கேட்டதற்கு, எதுவாக இருந்தாலும் தளபதி முடிவுதான். தளபதி தான் எங்கள் ஒரே தலைவர். அவருக்குக் கீழே அவர் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே தான் நாங்கள் செயல்படுத்துவோம்.
அவருடைய அனுமதி இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் நாங்கள் கண்டிப்பாக செய்ய மாட்டோம், அப்படித்தான் அனைத்து மாவட்ட தலைவர்கள் இளைஞர் அணி, தொண்டர் அணி, மாணவர் அணி, விவசாய அணி, வர்த்தக அணி என்று பல தலைவர்கள் இருந்தாலும் எல்லாம் எங்களுக்கு தலைவர் தளபதி தான் அவருக்கு கீழே தான் நாங்க எல்லாரும் என தெரிவித்தார்.
ஒவ்வொரு ஊருக்கும் நாங்கள் செல்லும் பொது மக்கள் விஜய் புகைப்படத்தை பார்க்கும் போது வரவேற்ப்பும் ரொம்ப நன்றாக இருந்தது. அதை வைத்து சொல்கிறேன் கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் எந்த ஒரு தப்பும் பண்ண மாட்டாங்க. யாரு தப்பு பண்ணாலும் கண்டிப்பாக தளபதி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.
மக்களுக்கு கண்டிப்பாக செய்வார்கள். உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் வந்துவிட்டீர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்று செய்தியாளர் கேட்ட போது, அது எல்லாமே தளபதி கிட்ட தான் கேக்கணும். தளபதி கிட்ட நான் கேட்டு அதற்கான பதிலை நான் சொல்கிறேன் என அவர் கூறினார்.