இந்த 10 டிப்ஸ்களை உங்களுடைய சமையலறையில் பயன்படுத்த உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
மழைத் தண்ணீரில் பருப்பை வேக வைத்தால் ஒரு கொதியில் சீக்கிரமாக வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும்.
ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகித்தால் விரைவில் கெட்டுப் போகாது.
தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்த பின்னர் வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள பால் வாடை நீங்கி விடும்.
பிளாஸ்கில் துர்நாற்றம் விலக வேண்டும் என்றால் வினிகர் போட்டு கழுவவேண்டும்.
கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.
சின்ன வெங்காயம் வாங்கி வந்த பிறகு வெயிலில் நன்கு உலர வைத்து எடுத்து வைத்தால் ஒரு மாதம் வரை கெட்டுப்போகாமல், முளை வராமல் இருக்கும்.
எலுமிச்சம் பழத்தை தினமும் ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்தால் ஒரு மாதம் வரையிலும் கெட்டுப் போகாமலும் வாடாமல் இருக்கும்.
இஞ்சியை ஈர மணலில் புதைத்து வைத்தால் அப்படியே இருக்கும்.
வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
வெண்டைக்காயின் காம்பையும், தலைபகுதியையும் நறுக்கி வைத்தால் மறுநாள் வரை சமைப்பதற்கு முற்றிப் போகாமல் இருக்கும்.