Categories
தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ +2 துணைத்தேர்வு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 துணைத் தேர்வு ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் முறையில் திருப்தி இல்லாத மாணவர்கள் துணை தேர்வு எழுதலாம். விருப்பத் தேர்வு எழுத விரும்புவோர் மீண்டும் தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏற்கனவே கட்டணம் செலுத்திய தனித்தேர்வர்கள் மீண்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |