சிபிஎஸ்இ மற்றும் சிஎஸ்சிஇ மாணவர்களுக்கான இரண்டாம் பருவ தேர்வு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருக்கிறது. இன்னும் 50 அல்லது 60 நாட்களே உள்ள நிலையில் எவ்வாறு திட்டமிட்டால் அதிக மதிப்பெண்கள் பெறலாம் மற்றும் கிடைக்கக்கூடிய 50 நாட்களை எவ்வாறு பயனுள்ளதாக பயன்படுத்தி மதிப்பெண்களை அள்ளலாம் என்பது குறித்த விரிவான தொகுப்பு இதோ கொடுக்கப்பட்டுள்ளது.
* முதலில் பாடத்திட்டங்களை பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் பாடத் திட்டங்கள் குறித்த சரியான புரிதல் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். அதாவது பாடத்திட்டங்களை பிரித்து நேரம் மற்றும் தேதி படி அட்டவணையிட்டு அதனை படிக்கும் போது எளிமையாக நாம் அத்தனை பாடங்களையும் அட்டவணையில் அடக்கி படித்துவிடலாம்.
* ஒவ்வொரு பாடத்தை படித்து முடித்ததுமே அந்தப் பாடத்தில் உள்ள முக்கியமான வினாக்கள் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக இணைய தளங்களில் சென்று வினா வங்கிகளை தேடி அவற்றின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
* அடுத்ததாக மிக முக்கியமானது உடல்நலம். சிலர் படிக்கிறேன் என்று புத்தகப் புழுக்களாக படிப்பிலேயே மூழ்கி தண்ணீர் அருந்தாமல் அதிகமாக கண்விழித்து உடல்நலத்தை கேடு விளைவிக்கும் விதம் ஏதாவது செய்வார்கள். மேலும் சரியாக உணவருந்தாமல் படித்துக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறான செயல் முறைகள் உடல் நலனை பாதிக்கும் அது தேர்வு நடைபெறும் நேரத்தில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே உடல்நலத்தில் கவனம் கொள்வது மிக முக்கியம்.