சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மே மாதத்தில் நடந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியியாவதற்கு முன்பே கல்லூரிகளில் மாணவர்கள் செயற்கைக்கான காலக்கெடுவை முடித்துக் கொள்ள வேண்டாம் என்று பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியது.
இதனிடையே சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாதம் ஆகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு தாமதத்தால் தமிழகத்தில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை தாமதமாகின்றது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.