சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் கட்டமாக விடையை மட்டும் குறிக்கும் தேர்வு டிசம்பர் மாதம் மற்றும் இரண்டாம் கட்டமாக விரிவான விடை அளிக்கும் தேர்வு மார்ச் மாதத்தில் நடைபெறும் என்று புதிய தேர்வு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற முதல் கட்ட தேர்தல் பல்வேறு குளறுபடிகள் நடந்து உள்ளது என்று புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கேள்வித்தாள்கள் தேர்விற்கு சில மணி நேரத்திற்கு முன் வெளியாகியுள்ளது.
மேலும் தேர்வில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவுகின்றனர் என்று ஆகிய புகார்கள் வந்துள்ளது. இதனால் மேலாண் கூட்டமைப்பினர் சிபிஎஸ்இ முதல்கட்ட பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சிபிஎஸ்இ பள்ளிகள் மேலாண்மை கூட்டமைப்பினர் மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் முதல் கட்ட பொது தேர்வுக்கான வினாத்தாள்கள் மற்றும் அதற்கான விடைகளையும் தேர்வு நடைபெறுவதற்கு முன் மாணவ மாணவிகளுக்கு சில பள்ளி ஆசிரியர்கள் வழங்கியுள்ளனர். மேலும் விடை தெரியாத கேள்விகளுக்கு ஆங்கில எழுத்தான ‘C’ என குறிப்பிட வேண்டும் என்று மாணவர்களுக்கு கூறப்பட்டுள்ளன. அவ்வாறு ‘C’ என குறிப்பிட்டுள்ள கேள்விக்கான பதில் a,b, மற்றும் d என இருந்தாலும் அதனை ஆசிரியர்களை மாற்றியமைத்து கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் முதல் கட்ட தேர்வில் வழங்கப்படும் மதிப்பெண்கள் இரண்டாம் கட்ட தேர்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் இதுபோன்ற தவறுகள் நடைபெறுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளியை சாராத ஒரே ஒரு நபர் மட்டுமே கண்காணிப்பாளராக நியமிக்கப்படுவதால் இது போன்ற தவறுகள் நடைபெறுகிறது என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதனால் சிபிஎஸ்இ பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற படுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து இந்த கடிதம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கும் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறப்படுவதால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.