Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிமெண்ட் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால்…. நள்ளிரவில் அலறி துடித்த மூதாட்டி…. பரபரப்பு சம்பவம்…!!!

வீட்டில் சிமெண்டு மேற்கூரை பெயர்ந்து விழுந்து மூதாட்டி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகியநத்தம் காலனி தொகுப்பு வீட்டில் ராஜலட்சுமி(70) என்பவர் வசித்து வருகிறார் . இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் மூதாட்டி படுகாயமடைந்து அலறி சத்தம் போட்டார். அந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்மழை காரணமாக தொகுப்பு வீட்டில் சிமெண்ட் மேற்கூரைகள் பெயர்ந்து விழும் நிலையில் இருக்கிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |