Categories
தேசிய செய்திகள்

சிம்டம்ஸ் இல்லையா…. அப்போ டெஸ்ட் எடுக்க வேண்டாம்…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்…

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமிக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அதற்கான அறிகுறிகளோ, ஆபத்தான நிலையோ இல்லாவிட்டால் அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் டெஸ்ட் எடுக்க தேவை இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிகுறிகள் இல்லாதவர்கள், வீட்டு தனிமையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள், கோவிட் மையங்களில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உள்ளூர் விமானங்களில் மேற்கொண்டவர்கள் டெஸ்ட் எடுக்க தேவை இல்லை.

அதனைத் தொடர்ந்து காய்ச்சல், இருமல், தொண்டைவலி, சுவை அல்லது நுகர்வு தெரியாதவர்கள், மூச்சு விட சிரமப்படுவர், இதர சுவாசப் பிரச்சினைகள் கொண்ட அனைவரும் டெஸ்ட் எடுக்க வேண்டும். அதனைப் போல சர்வதேச பயணம் மேற்கொண்டு வீடு திரும்புவோர், கடல் வழியாக கப்பலில் வருவர் ஆகியோரும் கட்டாயமாக டெஸ்ட் எடுக்க வேண்டும். இதனை தொடர்ந்து மருத்துவமனைகள் ஆர்டிபிசிஆர் எடுக்கவில்லை அல்லது முடிவு செய்வதில் தாமதம் ஆகியவற்றை காரணம் காட்டி அவசர சிகிச்சைப், பிரசவம் அறுவை சிகிச்சை போன்றவற்றை தள்ளிப் போடுவதோ அல்லது தாமதிப்பதோ கட்டாயமாக்க கூடாது என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |