Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் அடுத்த படம்…. வெளியான அப்டேட்…. “இப்படி மாறிட்டாங்க” அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

நடிகர் சிம்பு நடிக்கும்  புதிய படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரைத்துறையுலகில்  மிகவும் பிரபலமான நடிகர் சிம்பு .இவர் தற்பொழுது இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகின்றார்.  இது இவரது 46-வது படம் ஆகும் . இப்படத்தில் நடிப்பதற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்து தயாராகி உள்ளார்.

இந்தப்படத்தில் கதாநாயகியாக  நடிகை நிதி அகர்வால் நடிக்கின்றார். இது  பக்கா கமர்ஷியல் படமாக உருவாக உள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க  பாரதிராஜா ஒப்பந்தமாகியுள்ளார் மற்றும்  தமன் இசையமைக்கிறார்.

சிம்பு

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் சிம்பு  தனது சமூக வலைத்தள பக்கத்தில் அதாவது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பை வெளியிட்டிருந்தார்.

அதன்படி படத்தின் தலைப்பானது  ஈஸ்வரன் ஆகும். இது வருகின்ற 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று தியேட்டரில் இப்படம் ரிலீசாகும்  என தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  போஸ்டரில் சிம்புவின் தோற்றத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி  அடைந்து  உள்ளனர்.

 

Categories

Tech |