நடிகர் சிம்பு அடுத்ததாக கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள கொரோனா குமார் படத்தில் நடிக்க இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ திரைப்படம் உருவாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ‘பத்து தல’ படத்தில் நடிக்க இருக்கிறார் .
மேலும் சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள ‘மஹா’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் கோகுல் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘கொரானா குமார்’ படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அப்டேட்டுகள் வெளியாகிக் கொண்டிருப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.