Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘ஈஸ்வரன்’… ஜல்லிக்கட்டு காளை ஜனவரி 14-ஆம் தேதி வரான்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!

நடிகர் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள ஈஸ்வரன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன் . இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் நிதி அகர்வால் ,பாரதிராஜா, நந்திதா உட்பட பலர் நடித்துள்ளனர் . தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது . இந்நிலையில் இந்த படம் வருகிற ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

இது குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அதிரடியான போஸ்டரில் ஜல்லிக்கட்டு காளை ஜனவரி 14ஆம் தேதி வரான் என குறிப்பிடப்பட்டுள்ளது . ஏற்கனவே நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகிறது என்ற  செய்தியால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் .

Categories

Tech |