Categories
சினிமா தமிழ் சினிமா

“சிம்புவின் பிறந்த நாளன்று”…. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்?…. என்னன்னு பாருங்க….!!!!

பிரபல நடிகரான சிம்புவின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கிறது.

பிரபல நடிகரான சிம்புவின் திரைவாழ்க்கையில் “மாநாடு” திரைப்படம் முக்கியமான படமாக அமைந்தது. மேலும் அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சிம்பு பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கௌதம்மேனன் இயக்கத்தில் தயாராகி வரும் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தில் சிம்பு பயங்கர பிஸியாக நடித்து வருகிறார்.

வேல்ஸ் சார்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வர உள்ளது. இதற்கிடையே சிம்புவின் பிறந்த நாளன்று வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து செம மாஸாக பாடல் ஒன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விருவிருப்பாக இறுதி கட்ட பணிகளை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த படத்தினை படக்குழு ஏப்ரல் 14-ஆம் தேதியன்று வெளியிட திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |