நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய கெட்டப்பில் உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர். இவர் நடிப்பில் தற்போது ‘மாநாடு’ திரைப்படம் தயாராகி வருகிறது. இவர் சமீப காலமாக வலைதளங்களில் ரசிகர்களை உற்சாகப்படுத்த தனது படம் குறித்த அப்டேட்களையும் புதிய புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
An untold story #Atman #SilambarasanTR pic.twitter.com/xgPd1xjhOp
— Silambarasan TR (@SilambarasanTR_) December 7, 2020
அந்த வகையில் தற்போது நீண்ட தலைமுடியுடன் ஹேர் கலரிங் செய்து பெரிய மீசை தாடி வைத்து அசத்தலான போஸ் கொடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் . அதில் ‘சொல்லப்படாத கதை’ என்றும் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த சிம்புவின் ரசிகர்கள் கேங்ஸ்டர் லுக்ல இருக்கிங்க , ஹாலிவுட் ஹீரோஸ்க்கே டஃப் கொடுக்குறியே தலைவா , அடுத்த படத்துக்கு தயாராகுறிங்களா ? என்றெல்லாம் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும் இணையத்தில் இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது .