கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தனிந்து காடு படத்தில் சிம்பு நடித்து முடித்து இருக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன் இந்த கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்றப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருக்கின்றார்கள். இந்த படத்தில் கதாநாயகிகளாக கைடு லோகர் மற்றும் சித்தி இட்னானி போன்றோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் இந்தப் படத்தை தயாரிக்கின்றார். இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் இந்த படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி மாநாடு படத்தில் சிங்கிள் சாட்டில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி போன்று வெந்து தணிந்து காடு ஐந்து நிமிட சண்டைக்காட்சி ஒன்று சிங்கிள் சாட்டில் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த காட்சி மாநாடு படத்தை போன்ற நல்ல வரவேற்பை பெறும் எனவும் கூறப்படுகின்றது.