நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியான ‘போடா போடி’ படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2012ஆம் ஆண்டில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘போடா போடி’ . இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக அறிமுகமானார் . இந்த படத்தில் விடிவி கணேஷ், சந்தானம், ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமாகிய இந்த படம் சரியான வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ படம் சூப்பர் ஹிட்டானது.
இந்நிலையில் போடா போடி படத்தின் அடுத்த பாகம் உருவாகவுள்ளது. இதில் ஹீரோவாக சிம்பு நடிக்க , ரித்திகா பால் என்ற அறிமுக நடிகை கதாநாயகியாகிறார். மேலும் முதல் பாகத்தை தயாரித்த பதம் குமார் தற்போது இரண்டாவது பாகத்தையும் தயாரிக்கிறார் . இந்தப் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறாரா? அல்லது வேறு யாரும் இயக்குகிறாரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. தற்போது சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் தயாராகியுள்ளது. அடுத்ததாக மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து போடா போடி 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.