தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படைப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்கிறார். ஈந்த் படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.
அதனைத்தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான ‘காலத்துக்கும் நீ வேணும்’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாடலான ‘மறக்குமா நெஞ்சம்’ பாடல் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 6.21 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அறிவிப்பின்படி படத்தின் இடம் பெற்றுள்ள ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் ஏ.ஆர்.ரகுமான் குரலில் தாமரை வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.