சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் போப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் .
#MaanaaduDeepavali 🙏🏻#SilambarasanTR #Maanaadu @vp_offl @sureshkamatchi @thisisysr pic.twitter.com/Fey3ra9ckC
— Silambarasan TR (@SilambarasanTR_) September 11, 2021
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநாடு படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற தீபாவளி தினத்தில் இந்த படம் ரிலீஸாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.