Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘மாநாடு’… செம மாஸ் அப்டேட் சொன்ன யுவன்… ரசிகர்கள் ஆவல்…!!!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் முக்கிய அப்டேட்டை யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார் ‌. மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் மாநாடு படத்தின் முதல் பாடல் ரம்ஜான் பண்டிகையன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் அந்த சமயத்தில் வெங்கட் பிரபுவின் தாயார் மரணமடைந்ததால் பாடல் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘விரைவில் மாநாடு படத்தின் பாடல் வெளியாகும்’ என தெரிவித்துள்ளார் . இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் .

Categories

Tech |