Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் மாநாடு படம் …விலகிய முக்கிய பிரபலம்…..காரணம் .என்ன …?வெளியான தகவல்…!!

சிம்பு நடித்து வரும் மாநாடு படத்திலிருந்து முக்கிய பிரபலம் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயகக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் மாநாடு. இப்படத்தில் நடிகர்  சிம்பு அப்துல் காலிக் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் அவர்கள் நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  இப்படத்தின் ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் .நாதன் செய்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடக்கிறது.

இந்நிலையில் மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பாரதிராஜா அவர்கள், இப்படத்திலிருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரதிராஜா அவர்கள் பல்வேறு படங்களில் தற்போது நடித்து வருவதால், இப்படத்திற்கு  குறிப்பிட்ட தேதி ஒதுக்க முடியாததால் மாநாடு படத்திலிருந்து இவர்  விலகி உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இது குறித்த தகவல்கள் எதுவும் படக்குழுவினரிடமிருந்து வெளிவரவில்லை.

Categories

Tech |