Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘மாநாடு’ பட டிரைலர் எப்போது ரிலீஸ்?… செம மாஸாக வெளியான அறிவிப்பு…!!!

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு தற்போது  மஹா, பத்து தல, மாநாடு, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி அன்று தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் மாநாடு படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது .

Categories

Tech |