கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகவுள்ள மாறன் படத்தின் ட்ரைலரை சிம்பு தற்போது தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் மேடையில் வெளியிடவுள்ளார்.
தமிழ் திரையுலகின் நடிகரான தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றுள்ளது. இந்த படத்தை ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் இதில் காளி வெங்கட், சமுத்திரக்கனி உட்பட பல முன்னணி நடிகர்கள் தங்களது திறமையை வெளிக் கொணர்ந்துள்ளார்கள்.
இதற்கிடையே நடிகர் கமல் பிக்பாஸிலிருந்து விலகியதையடுத்து சிம்பு இந்த வாரத்திலிருந்து அதனை தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ்ஸை தொகுத்து வழங்கவுள்ள சிம்பு மாறன் படத்தின் டிரைலரை அந்த நிகழ்ச்சியின் மேடையில் வெளியிடவுள்ளார்.