சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணியில் அச்சம் என்பது மடமையடா திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது இந்த மாஸ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தில் பிரபல நடிகை கயாடு லோகர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மராத்தி நடிகையான கயாடு லோகர் கன்னடம், மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் வெந்து தணிந்தது காடு படத்தில் நடிப்பது உறுதியானால் இதுதான் அவர் நடிக்கும் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.